உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக, உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, படாளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.இந்நிகழ்வினை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லுாரிகளை தேர்ந்தெடுத்தல், விண்ணப்பம் செய்தல் போன்றவற்றை, துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரைத்தனர். பின், பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 12 மாணவ - மாணவியருக்கு, பரிசுத்தொகையை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி