உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருந்தண்டலம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை மீட்பு

பெருந்தண்டலம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை மீட்பு

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில், நேற்று மதியம், அதே கிராமத்தை சேர்ந்த பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஏரிக்கரை பகுதியில், நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டு, அந்த திசையில் தேடினர்.ஏரிக்கரை பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் மாட்டி வைக்கப்பட்டு இருந்த பை ஒன்றில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்தது.இது குறித்து, கிராம மக்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் மருந்துவ ஊழியர்கள், குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, குழந்தைக்கு பச்சிளங்குழந்தைகள் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி