உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலுார் சுவாமி தயானந்தா பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

கடலுார் சுவாமி தயானந்தா பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் கிராமத்தில் உள்ள சுவாமி தயானந்த ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.கடந்த 2015ல் ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 9வது சர்வதேச யோகா தினம், நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை, சுவாமி தயானந்த ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.இதில், பள்ளி மாணவ - மாணவியர், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பிராணாயாமம், யோகாசனம் மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகிய யோகாசனங்கள் பயிற்சியளிக்கப்பட்டன.பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், திருமூர்த்தி மலைப்பகுதியில் உள்ள 18 மலைக் கிராமங்களில், பயிற்சிபெற்ற முதல் யோகா பட்டதாரி ஆசிரியையான சங்கீதா என்பவர் பயிற்சியளித்தார்.மேலும், யோகா முறைகள், யோகா குறித்த உடல் மற்றும் மன அளவில் ஏற்படும் நன்மைகள், பயன்கள் குறித்து, பள்ளி மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி