உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

சென்னை, : சென்னை கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக தொலை பேசியில் தெரிவித்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை, எழும்பூர் காவல் துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு, நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், கிண்டியில் உள்ளதமிழக கவர்னர் மாளிகையில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில்அது வெடிக்கும் எனவும் கூறி, இணைப்பைதுண்டித்தார்.இதையடுத்து, கவர்னர் மாளிகையில் வெடி குண்டு பிரிவு போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பல மணி நேரம்நடத்திய சோதனையில், வெடிபொருள் எதுவும் கண்டறிப்படவில்லை.வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் தொலைபேசி அழைப்புவந்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக வழக்கு பதிந்த சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண், கள்ளக்குறிச்சி, எலவனசூர்கோட்டைபகுதியைச் சேர்ந்ததேவராஜ் என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார், தேவராஜை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இருப்பினும், அவரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை