உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேரமனுார் கோவில் குளத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைப்பு

பேரமனுார் கோவில் குளத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைப்பு

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி பேரமனுார், வாலீஸ்வரர் கோவில் எதிரே குளம் உள்ளது.இக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.இந்த குளத்தில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் இக்குள் உள்ளது. குளத்தின் தண்ணீர் மாசு படிந்தும், சுற்றி எந்த தடுப்பும் இல்லாமலும் இருந்து வந்தது.பள்ளி குழந்தைகள் சென்று வரும் வழியில் உள்ளதால், குளத்தைச் சுற்றி தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக தற்போது, குளத்தை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், தண்ணீரில் உள்ள பாசியை சுத்தம் செய்யும் இயந்திரம், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிப்பு நீர் நிலையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி