உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கத்தில் சுதந்திர தின ஓட்டம், நடை போட்டி

கல்பாக்கத்தில் சுதந்திர தின ஓட்டம், நடை போட்டி

கல்பாக்கம்,: அணுசக்தி துறையின் அணுபுரம் நகரிய பகுதியில், நெஸ்கோ எனப்படும் அணுசக்தி ஊழியர்கள் விளையாட்டு மற்றும் கலாசார கழகம், பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் சார்பில், இன்டிபென்டென்ஸ் ரன் அண்டு வாக் என்ற பெயரில், 10 கி.மீ., ஓட்டம், 5 கி.மீ., நடை, 5 கி.மீ ஓட்டப் போட்டிகள், நேற்று நடத்தப்பட்டன.அணுசக்தி துறையினர், சுற்றுப்புற பகுதியினர் என, 120 பெண்கள் உள்ளிட்ட 280 பேர், இப்போட்டியில் பங்கேற்றனர். முதல் 10 இடங்கள் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் கிருஷ்ணமோகன், முதன்மை நிர்வாக அலுவலர் மக்வானா, நெஸ்கோ நிர்வாகிகள் ராஜன், அஸ்கர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை