மேலும் செய்திகள்
கட்டுக்குள் வராத விலை மீன் பிரியர்கள் ஏமாற்றம்
12-Aug-2024
காசிமேடு: ராட்சத திருக்கை மீன்கள் அதிக அளவில் வந்ததால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனை களைகட்டியது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக, ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளில், அதிக அளவில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க வருவர். அந்த வகையில் நேற்று அதிகாலை முதலே, மீன் வாங்க காசிமேடில் ஏராளமானோர் குவிந்தனர்.அங்கு சங்கரா, சீலா, வஞ்சிரம், நெத்திலி, கடம்பா போன்ற மீன் வகைகளின் வரத்து, வழக்கம் போல் இருந்தது.ஆழ்கடலுக்கு சென்றிருந்த விசைப் படகுகள் அதிக அளவில் கரை திரும்பியதால், வழக்கத்திற்கு மாறாக, திருக்கை மீன்கள் வரத்து அதிகம் இருந்தது.அதிகபட்சமாக, 1 டன் வரையிலான திருக்கை மீன்கள் வரத்து இருந்தது. தவிர, 50 கிலோ முதல் 100 கிலோ எடையில், அதிக அளவிலான திருக்கை மீன்கள், காசிமேடு மீன் சந்தையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.பிடிபட்ட திருக்கை மீன்கள், ஆயிரக்கணக்கில் விலை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.ஆடி மாதம் முடிந்தாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள், கோவில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இரவு கும்பம் போடுதல் நிகழ்வில், மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் தேவை அதிகம் இருப்பதால், நேற்று மீன் நுகர்வும் அதிகமாகவே இருந்தது.
மீன்கள் விலை (ரூ)வஞ்சிரம் 900 - 1,100சீலா 400சங்கரா 300 -350பாறை 400மத்தி 200நண்டு 300 - 400கானாங்கத்த 200நெத்திலி 200 - 250டைகர் இறால் 950 - 1,000இறால் சிறியது 400 - 550கடம்பா 250 - 300
12-Aug-2024