உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூண்டி தொல்லியல் பூங்காவில் தொடரும் குரங்குகள் அட்டகாசம்

பூண்டி தொல்லியல் பூங்காவில் தொடரும் குரங்குகள் அட்டகாசம்

திருவள்ளூர்: பூண்டி தொல்லியல் பூங்காவில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து, பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.திருவள்ளூர் அடுத்த பூண்டி அகழ்வைப்பகம் கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.பூண்டி அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்று படுகை, அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் இங்கு உள்ளன.அப்பகுதியில், கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளைக் கொண்டு, தொல்லியல் துறை சார்பில், 'தொல் பழங்கால அகழ்வைப்பகம்' கடந்த 1985 முதல் செயல்பட்டு வருகிறது.பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலம், நுண்கற்காலம் மற்றும் புதிய கற்கால கருவி மற்றும் பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய மப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும், இங்கு, தொல் பழங்கால வாழ்க்கை முறையை அறியும் வகையில், 'தொல் பழங்கால பூங்கா' 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.இதில், யானை, டைனோசர், பழங்கால மனிதன் கல் ஆயுதங்களைக் கொண்டு காட்டு எருமையை வேட்டையாடுதல், காட்டு ஆடு ஆகிய உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. வார இறுதி நாட்களில் பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் சுற்றுலாவாசிகள் கண்டு, களித்து செல்கின்றனர்.இந்த நிலையில், தொல்பழங்கால பூங்காவில், 20க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம், கூட்டமாக கூடுவதால், பார்வையாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.குரங்குகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை