உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமரிசை

முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமரிசை

மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த பேரமனுார்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கூழ் வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா, விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு திருவிழா நடத்த, கிராம மக்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 19ம் தேதி, காப்பு கட்டி அம்மனுக்கு பால்குடம் எடுக்கப்பட்டது. 20ம் தேதி, விளக்கு பூஜை நடத்தப்பட்டது.தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு தீமிதி உற்சவமும் நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீ மிதித்தனர். தொடர்ந்து, முத்துமாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், சட்டமங்கலம், பேரமனுார், திருக்கச்சூர், பனங்கொட்டூர், மறைமலை நகர் பகுதிகளில் இருந்து, 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ