உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு

குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட செங்குந்தர்பேட்டை அருகே, குளக்கரை தெருவை சேர்ந்தவர் சகுந்தலா, 60. இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது, விஷக்குளவிகள் கொட்டி உள்ளன.அவரை மீட்ட உறவினர்கள், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி, சகுந்தலா உயிரிழந்தார். இது குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை