மேலும் செய்திகள்
ஊரப்பாக்கத்தில் மோசமான சாலையால் அவஸ்தை
18-Aug-2024
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் வசிப்போர், தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு செல்ல, மாநகர பேருந்து வசதியில்லை.அதனால், இப்பகுதிவாசிகள், மிகவும் சிரமம் அடைகின்றனர். தற்போது, இவர்கள் ஊனமாஞ்சேரியில் இருந்து வேங்கடமங்கலம் கூட்டுச்சாலை வந்து, மாநகர பேருந்து வாயிலாக, வண்டலுார் சிக்னல் வந்து, அங்கிருந்து மற்றொரு பேருந்து வாயிலாக, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர்.இவ்வாறு செல்லும் போது பள்ளி மாணவர்கள், குறித்த நேரத்திற்குள் செல்ல முடிவதில்லை. அதோடு, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் சிரமம் அடைகின்றனர்.எனவே, ஊனமாஞ்சேரியில் இருந்து வண்டலுார் வழியாக, கூடுவாஞ்சேரிக்கு சிற்றுந்து சேவை ஏற்படுத்தி தர வேண்டி, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஊனமாஞ்சேரியில் இருந்து வண்டலுார், தாம்பரம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு, எங்களுக்கு பேருந்து வசதி இல்லை.பேருந்து வசதி ஏற்படுத்தக்கோரி, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் நலன் கருதி, சிற்றுந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
18-Aug-2024