மேலும் செய்திகள்
திருவடிசூலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
4 hour(s) ago
குட்டையில் விழுந்த போதை வாலிபர் மீட்பு
4 hour(s) ago
கான்கிரீட் சாலை பணி விறுவிறு
4 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார் : குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; பிளம்பர். இவர், ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் சிப்காட் நிறுவனத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியில், பிளம்பராக வேலை செய்து வந்தார்.நேற்று காலை 9வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த மணிகண்டன், எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியே, தவறி கீழே விழுந்தார்.இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், மொபைல் போன் பேசியபடி வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago