உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு போக்சோ

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியப்பாவுக்கு போக்சோ

கூடுவாஞ்சேரி,:தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரின் 14 வயது மகள், அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தினமும் பணிக்கு செல்லும் கார் ஓட்டுநர், இரவு தான் வீடு திரும்புவார். சிறுமியின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அதே தெருவில் உள்ள அவரது பெரியப்பா வீட்டிற்கு சென்று, வீட்டுப்பாடங்கள் எழுதுவதை சிறுமி வழக்கமாக கொண்டிருந்தார்.கடந்த 8ம் தேதி, சிறுமி பள்ளி முடிந்து பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவளது பெரியப்பா தன் அறைக்குள் அழைத்துச் சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.வெளியே சென்று வீடு திரும்பிய சிறுமியின் பெரியம்மா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, சிறுமியை தன் கணவரிடமிருந்து மீட்டுள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தந்தை, கடந்த 10ம் தேதி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்படி போலீசார் விசாரித்ததில், சிறுமியிடம் அவளது பெரியப்பா பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை