மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
14-Feb-2025
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கீழவலம்பேட்டையைச் சேர்ந்தவர் மனோகரன், 55; தனியார் நிறுவன மேலாளர்.நேற்று, தனக்கு சொந்தமான 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பட்டு அருகே உள்ள நிறுவனத்திற்கு பணிக்கு சென்றார்.புதுப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.இதில், மனோகரன் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, சிகிச்சை பலனின்றி மனோகரன் உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
14-Feb-2025