உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்தலசயனர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை மாற்றியமைப்பு

ஸ்தலசயனர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை மாற்றியமைப்பு

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சுவாமி உலா செல்லும் திருத்தேர்உள்ளது.சித்திரை பிரம்மோற்சவத்தில் ஸ்தலசயன பெருமாள், அவதார ஜெயந்தி உற்சவத்தில், பூதத்தாழ்வார் ஆகியோர், தேரில் உலா செல்வர்.இத்தேரை, 15 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்தார். அதற்கு முந்தைய தேர், கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது.புதிய தேர், அதே பகுதியில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி, பாதுகாப்பு கூரை அமைக்கப்பட்டது. தற்போது, கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.திருப்பணிகள் உபயதாரர், ஆகமம் மற்றும் வாஸ்து அமைப்பின்படி, கோவில் வளாகத்திற்கு வெளியே தேரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.சித்திரை பிரம்மோற்சவ திருத்தேர் உலா உற்சவம், ஏப்., 23ம் தேதி நடந்து முடிந்தபின், தேர்வெளியில் நிறுத்தப்பட்டது. முந்தைய இடத்தில் உள்ள பாதுகாப்பு கூரையை பிரித்து, தேருக்கு பாதுகாப்பாக அமைக்காமல்தாமதப்படுத்தப்பட்டது.இரண்டு மாதங்களாக,கோடை வெயில், மழை, சூறாவளி காற்று ஆகியவற்றால், திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் பாதிக்கப்பட்டது.இதுகுறித்து, நம்நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. நேற்று, முந்தைய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கூரையை, புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை