உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தியுடன் ரீல்ஸ் வாலிபர் கைது

கத்தியுடன் ரீல்ஸ் வாலிபர் கைது

சென்னை, சென்னை கொளத்துார், பாபு நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 19. இவர் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.சமீபத்தில், அவரதுநண்பரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து, ரீல்ஸ்வெளியிட்டார்.அதில், சினிமா பட வசனத்துடன் கத்தியை சுழற்றியபடி எடுக்கப்பட்ட வீடியோ பதிவிட்டிருந்தார்.இது குறித்து கொளத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், கொளத்துார் பேப்பர் மில்ஸ் சாலையில் போலீசாரின் வாகன சோதனையில் சந்துரு சிக்கினார்.போலீசார், அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி