உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - செங்கை தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

திருப்போரூர் - செங்கை தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் - செங்கல்பட்டு இடையே, மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், வளர்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இச்சாலை பயண வசதிக்கு ஏற்ப, 13 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ரயில் தடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வழியாக இயக்கப்படும் அரசு, மாநகர மற்றும் தனியார் பேருந்துகள் வாயிலாக, இப்பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் சென்றுவருகின்றனர்.எனினும், காலை, மாலை பள்ளி நேரங்களில், குறைவான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் கடுமையாக சிரமப்படுகின்றனர்.எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல், திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் தடத்திலும், கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை