உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை

கால்நடை மருத்துவமனை பனையூரில் அமைக்க கோரிக்கை

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பனையூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம், ஓதியூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பனையூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கால்நடை வசதி இல்லாததால், கால்நடைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் 5 கி.மீ., தொலைவில் உள்ள கடப்பாக்கம் கால்நடை மருத்துவமனை அல்லது செய்யூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது.உடல்நலம் பாதிக்கப்பட்ட கால்நடைகளை நீண்ட துாரம் அழைத்துச் செல்ல பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மழைக்காலங்களில் நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை துாரம் கொண்டு செல்வதற்குள் அவை உயிரிழந்து விடும் சூழ்நிலையும் உள்ளது. இதனால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது.கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படும் பனையூர் பகுதியில், அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ