உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டுகோள்

உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டுகோள்

செய்யூர் : சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தின் குளக்கரைப் பகுதியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், செய்யூர் செல்லும் பிரதான சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது.வில்லிப்பாக்கம் காலனி, தையலங்காடு, ஒத்திவிளாக்கம், சூரக்குப்பம் ஆகிய கிராம மக்கள், இந்த சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.தினசரி பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என, தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர்.பேருந்து நிறுத்தம் வயல்வெளி பகுதிகளின் அருகே அமைந்துள்ளதால், அவ்வப்போது விஷப்பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆகையால், இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ