உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான அஞ்சூர் சாலை சீரமைக்க வேண்டுகோள்

சேதமான அஞ்சூர் சாலை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், அஞ்சூர் -- தென்மேல்பாக்கம் சாலை 3 கி.மீ., துாரம் உள்ளது.இந்த சாலையை, அஞ்சூர், திருவடிசூலம், குண்ணவாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.சிங்கபெருமாள் கோவில், அனுமந்த புரம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, மகேந்திரா சிட்டி பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளுக்கு செல்லும் மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், ஒரு கி.மீ., தொலைவுக்கு, சிதிலமடைந்து குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.ஜல்லிக்கற்கள் குத்தி, இருசக்கர வாகனம் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.எனவே, சிதிலமடைந்த இந்த சாலையை, புதிதாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை