உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு அதிகாரிகளுக்கு தேர்தல் அலுவலர் உத்தரவு

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு அதிகாரிகளுக்கு தேர்தல் அலுவலர் உத்தரவு

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 31 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம், ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தரைத்தளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளன.ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 12 ஸ்ட்ராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்த மையத்தில், 24 மணி நேரமும், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் அலுவலர்கள், ஊடகத்துறை, போலீசார், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைவருக்கும், உணவு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்ய வேண்டும் என, உதவி தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் அலுவலர்உத்தரவிட்டார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, பள்ளிக்கரணை துணை கண்காணிப்பாளர் கவுதம் கோயல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ