| ADDED : ஜூலை 26, 2024 02:35 AM
மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கனரக வாகனங்கள் அதிகரித்துள்ளன.அவை, புறநகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், புறநகரை ஒட்டி உள்ள கிராமங்களில் செயல்பட்டுவரும் கிரஷர்களுக்கும் சென்று வருகின்றன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வரும் நிலையில், 'டாரஸ்' லாரிகள் அதிக வேகத்தில் தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன.அப்போது, லாரிகளில் உள்ள செம்மண், 'எம் - -சாண்ட்' போன்றவை காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், வாகன ஓட்டி கள் தடுமாறி வருகின்றனர்.எனவே, இதுபோல் செல்லும் வாகனங்கள் மீது, வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.