உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியை கடத்த முயன்ற ரவுடி சிறையிலடைப்பு

சிறுமியை கடத்த முயன்ற ரவுடி சிறையிலடைப்பு

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கீவளூரைச் சேர்ந்தவர் சகா என்கிற சீனிவாசன், 24; பிரபல ரவுடி. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி, கஞ்சா, ஆள் கடத்தல்உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்உள்ளன.ஸ்ரீபெரும்புதுார் அடுத்துள்ள பகுதியில் வசித்து வரும், 17 வயது சிறுமியை, சீனிவாசன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும், சிறுமியை பின் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்றுமுன்தினம், சிறுமியை கடத்தி சென்று, சீனிவாசன் திருமணம் செய்ய முயன்றுள்ளார்.இதை தடுத்த சிறுமியின் பெற்றோருடன், சீனிவாசன் தகராறில் ஈடுபட்டார்.அவர் சிறுமியின் பெற்றோரை கையால் தாக்கியும், கத்தியால்வெட்டவும் முயன்றுள்ளார். காயமடைந்த சிறுமியின் பெற்றோர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து விசாரித்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சிறுமிக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை