மேலும் செய்திகள்
'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி
26-Feb-2025
சென்னை, ''பணத்துக்காக வேலை செய்பவர்களைவிட, ரசித்து வேலையை செய்பவர்களே வெற்றி பெறுகின்றனர்,'' என, சென்னை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.சென்னையை அடுத்து திருவேற்காடில் உள்ள எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது. இதில், ஜார்க்கண்ட் கவர்னரின் கல்வி ஆலோசகரும், சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி, பல்கலை அளவில் ரேங்க் எடுத்த, 56 மாணவர்களுக்கு, 4.70 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பட்டங்களை வழங்கினார்.பின், பாலகுருசாமி பேசியதாவது:நீங்கள் பட்டதாரியாக காரணமான பெற்றோருக்கும், கல்லுாரிக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும். பணம் மட்டுமே வெற்றி தராது; தான் செய்யும் வேலையை ரசித்து செய்பவரே வெற்றி பெறுகிறார். நீங்கள் உங்களுக்கான நோக்கத்தை வரையறுத்து சரியாக திட்டமிட்டு, விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும். அதேநேரம் சமூகத்துக்கும், நாட்டுக்கும் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கல்லுாரி செயலர் தசரதன், துணைத்தலைவர் பரந்தாமன், தாளாளர் அமர்நாத், இணை செயலர் கோபிநாத், கல்லுாரி முதல்வர் ராமச்சந்திரன், சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி இயக்குநர் சரஸ்வதி, எஸ்.ஏ., கலை, அறிவியல் கல்லுாரி இயக்குநர் அரவிந்த், எஸ்.ஏ.பொறியியல் கல்லுாரி இயக்குநர் சபரிநாத், சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் எஸ்.ஏ கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் வெங்கடேஷ் ராஜா, ஆலோசகர் சாலிவாகனன் உட்பட பலர் பங்கேற்றனர்.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பட்டங்களை வழங்கினார். உடன், கல்லுாரி நிர்வாகிகள் துரைசுவாமி, தசரதன், அமர்நாத், கோபிநாத், அரவிந்த், சபரிநாத், வெங்கடேஷ்ராஜா, முதல்வர் ராமச்சந்திரன்.
26-Feb-2025