உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான பரனுார், பழவேலி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, திம்மாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலை ஓரம் மற்றும் காப்புக்காடுகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில் மற்றும்அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து,வாகனங்கள் வாயிலாக கழிவுகள் கொண்டுவந்து சாலை யோரம் கொட்டப்படுகின்றன.இதனால், இந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி, வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதிவாசிகளுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன.மேலும், இந்த இறைச்சிக் கழிவுகளை உண்ண வரும் நாய்கள் சாலையில் சுற்றுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். குப்பை கொட்டப்பட்டுள்ள இடங்களில் உலவும் குரங்குகள், அங்குள்ள பிளாஸ்டிக் பொருள்களை உட்கொள்கின்றன.எனவே, காப்புக் காட்டில் இது போல குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.இது குறித்து, கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:பொது வெளியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள், மேய்ச்சலுக்கு செல்லும் வெள்ளாடுகளை கடிப்பது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.பொது வெளியில் கழிவுகளை கொட்டும் இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது வாயிலாகவே, இந்தஅட்டூழியத்தை கட்டுப் படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை