மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (09.10.2025) செங்கல்பட்டு
5 hour(s) ago
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த ஜமீன் எண்டத்துார் கிராமத்தில், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு, 35 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த நுழைவாயில் கதவு, கடந்த சில நாட்களுக்கு முன் வாகனம் மோதி சேதமடைந்தது. அதனால், தற்போது இரவு நேரங்களில் பள்ளி நுழைவாயில் கதவை பூட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகள், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் செய்வதற்கான கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி, கால்நடை களின் புகலிடமாகவும் மாறி வருகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள அரசு பள்ளி நுழைவாயில் கதவை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5 hour(s) ago