கடுமையாக சேதமடைந்த சாலை பவுத்தங்கரணையில் திணறல்
செய்யூர்:செய்யூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பவுத்தங்கரணை கிராமம். இந்த கிராமத்தில், செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் 1 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.இதை நல்லுார், ஓணம்பாக்கம், பவுத்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் பள்ளி குழந்தைகள், விவசாயிகள், பொதுமக்கள் என, தினமும் ஏராளமானோர் கடந்து செல்கின்றனர்.சாலை முறையான பராமரிப்பு இல்லாததால், ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும், இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.