| ADDED : ஜூலை 29, 2024 10:55 PM
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் 40,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.அதோடு, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த சாலையில் சென்று வருகின்றன.இந்த சாலையில், சிங்க பெருமாள் கோவில்பகுதியில், ரயில்வே கேட்உள்ளது.நேற்று காலை, வழக்கம் போல ரயில்வே கேட் மூடும் போது, செங்கல்பட்டில் இருந்துஆப்பூர் குப்பை கிடங்கிற்கு சென்ற செங்கல்பட்டு நகராட்சி குப்பை லாரி, ரயில்வே கேட்டில் மோதியது.இதில், கேட் உடைந்தது. அதனால், ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இருபுறமும், ஒரு கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மறைமலை நகர்போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, வாகனங்களை மறைமலை நகர் சாமியார் கேட் வழியாக, மாற்று வழியில் அனுப்பினார்.சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், உடைந்த ரயில்வே கேட்டை அகற்றி, புதிய கேட் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துஏற்படுத்திய குப்பை லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.