மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
22 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
22 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
22 hour(s) ago
சென்னை: சென்னையில் இயங்கி வரும் கேபா செஸ் அகாடமி சார்பில்,- மாநில அளவிலான 2ம் ஆண்டு செஸ் போட்டி, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், சிறுவர் - சிறுமியருக்கு 7, 9, 11, 13, 15, 17 ஆகிய வயது பிரிவின் கீழ் தனித்தனியாகவும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓபன் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர் - சிறுமியர் பிரிவில், தமிழகம் முழுதும் இருந்து 863 பேர் பங்கேற்றனர். ஓபன் பிரிவில் 163 பேர் பங்கேற்றனர்.இதில், ஓபன் பிரிவில் சென்னை வீரர் விஜய் ஸ்ரீராம் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். மற்றொரு சென்னை வீரர் சைலேஷ் 6.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு, முறையே 5,000, 3,000, 2,500 ரூபாய் பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன.சிறந்த வீராங்கனையாக சென்னையைச் சேர்ந்த ஆருஷி தினேஷ், சிறந்த மூத்த வீரராக சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் டேனியல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago