உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்டிக்கர் ஒட்டும் தகராறு கார் டிரைவருக்கு தையல்

ஸ்டிக்கர் ஒட்டும் தகராறு கார் டிரைவருக்கு தையல்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36; கார் டிரைவர். இவர், நேற்று மதியம், பரனுார் வட்டார போக்கு வரத்து அலுவலகம் அருகிலுள்ள 'ஸ்டிக்கர்' கடைக்கு சென்று, 'நம்பர் பிளேட்'டை ஸ்டிக்கரில் எழுதுமாறு கூறியுள்ளார்.இதில், வெங்கடேசனுக்கும், இன்பத்தமிழனுக்கும் சண்டை ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதில் வெங்கடேசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, அவரது நண்பர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, ஏழு தையல் போடப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரும் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ