உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை பள்ளத்தில் ஜல்லி கொட்டி சீரமைத்துள்ளதாக கண் துடைப்பு

சாலை பள்ளத்தில் ஜல்லி கொட்டி சீரமைத்துள்ளதாக கண் துடைப்பு

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளி அருகில், சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, தினமும் நுாற்றுக்கணக்கான கல் குவாரி கனரக வாகனங்களும் செல்கின்றன.இந்த சாலையில் பள்ளி எதிரிலும், கிராம நிர்வாக அலுவலகம் எதிரிலும், பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.அவற்றில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் சாய்ந்த நிலையில் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதையடுத்து, சாலையில் இருந்த பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு மூடப்பட்டன.தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் செல்வதால், கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் பரவி உள்ளன. மேலும், அதிக அளவில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு, சாலையில் 2 அடி ஆழம் வரை இருந்த பள்ளங்கள், ஜல்லிக்கற்கள் கொண்டு கடந்த வாரம் மூடப்பட்டன.கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுதும் பரவி உள்ளன.சாலையில் இருந்த பள்ளத்தை முறையாக சீரமைத்து தார் சாலை அமைக்காமல், கண்துடைப்புக்காக வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் பள்ளத்தில் கொட்டி மூடப்பட்டு உள்ளது.இந்த கற்களால் இருசக்கர வாகனம், சைக்கிளில் செல்வோர் வழுக்கி கீழே விழும் நிலை உள்ளது.எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைத்து, பள்ளம் இருந்த இடங்களில் பேட்ச் ஒர்க் செய்து, நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி