உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி

ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி

மாமல்லபுரம்:மாமல்லபுரம், தேவனேரி பகுதியில் கிழக்கு கடற் கரை சாலை கடக்கிறது. பழைய கிழக்கு கடற்கரை சாலையான உட்புற சாலையும், புதிய கிழக்கு கடற்கரை சாலையும், தேவனேரி யின் வடக்கு, தெற்கு பகுதிகளில் இணைகின்றன.வடக்கு சந்திப்பை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் 2022ல் சாலையோர பூங்கா அமைத்தது. இதையடுத்து, தெற்கு சந்திப்பை ஒட்டி, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி இடத்தை, சிலர் கூட்டாக ஆக்கிரமித்து, கடைகள் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன.இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர்.இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறையி னர் கூறியதாவது:தேவனேரி தெற்குசந்திப்பில், நெடுஞ் சாலைக்கு சொந்தமான இடத்தில், சிலர் மண் நிரப்பி வந்தனர். இது குறித்து விசாரித்ததில், சாலையோர பகுதியைஆக்கிரமித்து, கடைகள் கட்ட முயற்சித்ததுதெரிந்தது. உடனடியாக நாங்கள் மண்ணை அகற்றி,ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினோம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ