உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாங்குழியாக மாறிய சாலை தினமும் 8 போடும் அவலம்

பல்லாங்குழியாக மாறிய சாலை தினமும் 8 போடும் அவலம்

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டி புண்ணியம் ஊராட்சி, சிவகாமி நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:சிவகாமி நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, சாலை முழுதும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இந்த வழியாக சென்று வருகின்றன.பள்ளங்கள் அதிகளவில் உள்ளதால், பள்ளி வாகனங்கள் அசைந்து அசைந்து செல்லும் நிலை உள்ளது. சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பாதசாரிகள் மீது சேற்றை வாரி இறைத்து விட்டு செல்கின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை