மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
39 minutes ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
40 minutes ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
40 minutes ago
மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மறைமலை நகர் அடுத்த சாமியார் கேட் சர்வீஸ் சாலையை, சாமியார் கேட், பேரமனுார், தர்னீஸ் கொயர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையில், பூமிக்கு அடியில் தனியார் கேபிள் இணைப்புகள் செல்கின்றன. இந்த இணைப்புகளை பராமரிக்கும் பணி, சில நாட்களாக நடந்து முடிந்தது.இதற்காக, சாமியார் கேட் அருகில், சர்வீஸ் சாலையில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, 5 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில், எச்சரிக்கை பலகை மற்றும் பணி நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகை, இரவில் மிளிரும் பட்டைகள் உள்ளிட்டவை வைக்கப்படவில்லை.இதனால், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இரவு பணி முடித்து, இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.இது குறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், சர்வீஸ் சாலையின் நடுவே தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் கொட்டி நிரப்பி மூடினர்.
39 minutes ago
40 minutes ago
40 minutes ago