உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக பாதையை மேம்படுத்த எதிர்பார்ப்பு

திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக பாதையை மேம்படுத்த எதிர்பார்ப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலக நுழைவாயில் முகப்பு பகுதியை, பாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம், ஒரகடம் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்குகிறது.இந்த அலுவலக கட்டடம், கடந்த 2008ல் கட்டப்பட்டது. வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்அலுவலகங்களும், இவ்வளாகத்தில் இயங்குகின்றன.பிரதான சாலை, அலுவலக வளாகம் ஆகியவற்றுக்கு இடையில், குறுகிய நீள பாதை உள்ளது. இப்பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பே, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது.அரசு நலத்திட்ட சேவைகள் பெற, தினமும் ஏராளமானோர் இவ்வளாகத்திற்கு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள்,பாதசாரிகள் ஆகியோர், பாதை சீரழிந்த நிலையில் உள்ளதால், நடக்கவேசிரமப்படுகின்றனர்.இதுமட்டுமின்றி, அலுவலகங்கள் முகப்பு பகுதியை அடையாளம் காண இயலாத வகையில், அடர்ந்து வளர்ந்துள்ள மரங்கள், முற்றிலும் முகப்பை மறைத்துள்ளன. பெயர்ப்பலகையும் இல்லை.அதனால், பாதையை சீரமைத்து, இருபுறமும் நடைமேடையுடன் அலங்கார புல்வெளி, நுழைவாயிலில் பெயர்ப்பலகை வளைவு அமைக்க, தாலுகா நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை