உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை தோட்டக்கலை துறையில் மரம், செடிகள் விற்பனைக்கு தயார்

செங்கை தோட்டக்கலை துறையில் மரம், செடிகள் விற்பனைக்கு தயார்

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, பூமியில் உள்ள ஈரப்பதம் காரணமாக, மரக்கன்றுகள் நடவு செய்ய ஏதுவான சூழல் உள்ளது.இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, பழம் மற்றும் காய்கறி பயிர்களின் நடவு பொருட்களை, குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறினர்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாகவும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டங்களில், விவசாயிகள் மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுகள், வெண்டை விதைகள் உள்ளிட்ட காய்கறி செடிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விதைகள் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து பயன் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ