உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி மோதி டூ - வீலரில் சென்றவர் பலி

லாரி மோதி டூ - வீலரில் சென்றவர் பலி

கூவத்துார்:கூவத்துார் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முரளி, 32. இவர், நேற்று மாலை, தனது பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், கூவத்துாரில் உள்ள வாட்டர் கம்பெனி அருகே செaன்றபோது, எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி முரளி கீழே விழுந்தார். லாரியின் பின்பக்க சக்கரம் முரளியின் தலையில் ஏறி இறங்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு, முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்துார் போலீசார், முரளியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ