உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கேளம்பாக்கம் இணைப்பு சாலையில் குலுங்கியபடி செல்லும் வாகனங்கள்

கேளம்பாக்கம் இணைப்பு சாலையில் குலுங்கியபடி செல்லும் வாகனங்கள்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் - -மேடவாக்கம் சாலையிலிருந்து, கீழ்க்கோட்டையூர் வழியாக, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையை இணைக்கும் உள்சாலை அமைந்துள்ளது.இச்சாலை வழியாக, மாம்பாக்கம், பொன்மார், போலச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயணிக்கின்றனர். மேலும், தண்ணீர் லாரிகள் போன்ற கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன.இதில், மாம்பாக்கம் - -மேடவாக்கம் சாலை பகுதியில் இருந்து, 500 மீட்டர் சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்கவும், அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை