உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளிக்கான வாலிபால்: டான் பாஸ்கோ வெற்றி

பள்ளிக்கான வாலிபால்: டான் பாஸ்கோ வெற்றி

சென்னை: சென்னையில் நடந்த 'பிளேஸ்' வாலிபால் லீக் போட்டியில், மான்போர்ட் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில், 3 - -0 என்ற நேர் செட் கணக்கில், டான்பாஸ்கோ பள்ளி வெற்றி பெற்றது.சென்னையில் முதன் முறையாக பள்ளிகளுக்கு இடையிலான 'பிளேஸ்' வாலிபால் போட்டிகள், நகரில் பல பள்ளி மைதானங்களில் நடந்து வருகின்றன. தற்போது நடக்கும் இப்போட்டிக்கான முதல் சீசனில் டான்பாஸ்கோ, சேது பாஸ்கரா, செயின்ட் மேரீஸ், மான்போர்ட் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டிகள், லீக் முறையில் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம், ஆலந்துார் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில், மான்போர்ட் பள்ளியுடன், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி அணி மோதியது.இதில் தடுப்பாட்டத்திலும், தாக்குதல் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட டான்பாஸ்கோ பள்ளி வீரர்கள், முறையே 25 - -19; 25 - -18, 25 - -21 என, மூன்று செட்களையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !