உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், புளியரணங்கோட்டை ஊராட்சியில், புதிதாக திறக்கப்பட்ட நியாய விலை கடை கட்டடத்தை, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புளியரணங்கோட்டை ஊராட்சியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இம்மக்களின் தேவைக்காக, ஊராட்சி அலுவலகக் கட்டடம் அருகே, 2021 -- 2022 ம் ஆண்டில், மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நியாய விலை கடையில் மின் இணைப்பு இல்லாததால், பயன்பாடு இன்றி பூட்டியே உள்ளது.தற்காலிகமாக, இ- - சேவை மைய கட்டடத்தில், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.எனவே, அனைத்து பணிகளும் முடிவுற்று, மின் வசதியின்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ள புதிய நியாய விலை கடையை, விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை