உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிதிலமடைந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

சிதிலமடைந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பயில, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்த கட்டடம் கட்டப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்ததால் சுவர்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் உள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:அங்கன்வாடி மையகட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த மழைக் காலத்தில், அருகில் உள்ள மற்றொரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.அங்கும் போதிய அளவு இடவசதி இல்லை. பொதுமக்கள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியில், சிதிலமடைந்த கட்டடம் உள்ளதால், அந்த வழியே செல்வோர் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது.எனவே, இந்த கட்டடத்தை இடித்து, இதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம்கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ