மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
18 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
18 hour(s) ago
செய்யூர்,:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.வேம்பனுார், ஆலம்பரைகுப்பம், விளம்பூர் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.சுமார், 30,000 மேற்பட்ட கிராம மக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், மகப்பேறு, தடுப்பூசி, நோய்த்தடுப்பு என, பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில், அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிக்கி, காயமடைவோரை, அவசர சிகிச்சைக்கு, 60 கி.மீ., தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், 45 கி.மீ., தொலைவில் உள்ள புதுச்சேரிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளதால், செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.தற்போது, கிழக்கு கடற்கரைச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வரும் நிலையில், கடலுார், கும்பகோணம், சிதம்பரம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு, அதிக அளவில் வாகனங்கள் செல்ல உள்ளதால், மேலும் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, கடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago