| ADDED : ஜூலை 21, 2024 07:39 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில், கைவிடப்பட்ட கல்குவாரி அருகே, தமிழ்நாடு அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது.கல் குவாரி அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள் கொட்டி குவித்து வருகின்றனர். மேலும், குப்பை கழிவுகளை மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு எரித்து விடுகின்றனர்.இதனால், அவ்வப்போது இப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, குப்பையை முறையாக அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.