உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாக்கம் ஏரிக்கரை மீது தார்ச் சாலை அமைக்கப்படுமா?

பாக்கம் ஏரிக்கரை மீது தார்ச் சாலை அமைக்கப்படுமா?

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாக்கம் ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.ஏரிக்கரையின் மீது உள்ள மண் சாலையை தாதங்குப்பம், புளிக்கொறடு, வசந்தவாடி, வில்வராயநல்லுார், ஆமையம்பட்டு, திருளச்சேரி, பொறையூர் உள்ளிட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்மற்றும் வெளியூர் பகுதிக்குவேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.ஏரிக்கரையின் மீது மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில்இருசக்கர வாகனங்கள்மற்றும் ஆட்டோவில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.இதன் காரணமாக, தார் சாலை அமைத்து தரக்கோரி, பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை