உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அச்சிறுபாக்கத்தில் பணி தீவிரம்

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அச்சிறுபாக்கத்தில் பணி தீவிரம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கி காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தன.மேலும், சாலையின் மையத்தடுப்பு பகுதியில் உள்ள புற்களை மேயும் கால்நடைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வந்தனர்.இதன் காரணமாக, நெடுஞ்சாலை துறையினருக்கு, அப்பகுதியினர் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.குறிப்பாக, வெங்கடேசபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து, தனியார் வங்கி வரை, 500 மீட்டர் துாரத்திற்குள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொது மக்கள், வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தனர்.இதனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக, சாலையின் மையத் தடுப்புகளில், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள், சாலையை கடந்து செல்லாதவாறு, இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால், பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும் என, சமூக ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ