உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை, வழக்கம் போல தனது டியோ இருசக்கர வாகனத்தில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.ஆப்பூர் அடுத்த சேந்தமங்கலம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த ஈச்சர் சரக்கு வாகனம், டியோ ஸ்கூட்டர் மீது மோதியதில், கார்த்திக் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.அவரின் தலைமீது அதே 'ஈச்சர்' சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை