மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு
07-Oct-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், நில அபகரிப்பு பிரிவில், 10 வழக்குகளில் விசாரணை நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபரிகரிப்பு பிரிவு உள்ளது. இங்கு, நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்தது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, பதிவுத்துறை, நில அளவைத் துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், டி.எஸ்.பி., நாகலிங்கம், நில அளவை ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நிலம் தொடர்பான 10 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதாகக் கூறியதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த குறைதீர்வு கூட்டம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
07-Oct-2025