உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1,000 பனை விதைகள் மறைமலை நகரில் நடுகை

1,000 பனை விதைகள் மறைமலை நகரில் நடுகை

மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்., 3 நாகவல்லியம்மன் கோவில் பகுதியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அப்துல் கலாம் பொது நல அமைப்பு மற்றும் மறைமலை நகர் அரசு பள்ளி நாட்டு நலப்பணி மாணவர்கள் சார்பில், 1,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பனை விதைகளை நடுவு செய்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த ஆண்டில், 5,000 பனை விதைகள், தங்களின் அமைப்பு வாயிலாக நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக, அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ