தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் தயார்
செங்கல்பட்டு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 108 ஆம்புலன்ஸ்கள், 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர மேலாண்மை பிராந்திய செயலர் முகமது பிவால் அறிக்கை: தீபாவளி பண்டிகையின் போது அவசர தேவைக்கு ஏற்ப, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீயணைக்க பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர மருந்து பொருட்கள் போதுமான அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.