மேலும் செய்திகள்
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
7 minutes ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
7 minutes ago
திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த பேரூராட்சி ஊழியர்கள், அபராதம் விதித்தனர். திருப்போரூர் பேரூராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் ஹோட்டல், துரித உணவு கடைகள், டீ கடை, குளிர்பான கடை, மளிகை, காய்கறி, பேக்கரி உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா, துப்புரவு அலுவலர் ரகுபதி, பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து, கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, மொத்தம் 3,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 'இனி, அடிக்கடி இதுபோன்ற சோதனை நடைபெறும்' என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத் தலைவர் பரசுராமன், வார்டு கவுன்சிலர்கள், 'மீண்டும் மஞ்சள் துணிப்பைகளை உபயோகிப்போம்' என எழுதப்பட்ட பை மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் கடைகளில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
7 minutes ago
7 minutes ago